உடல் தேவைகள் - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II
Child Development and Pedagogy Paper 1,2
உடல் தேவைகள்:
5 முதல் 8 வயது வரை
* 10 முதல் 12 மணி வரை நல்லுறக்கம், பற்களின் பாதுகாப்பிற்குத் தேவை. அடிக்கடி ஒய்வு, பொழுபோக்கு அம்சங்கள், ஒடியாடி விளையாடுதல் அவசியமாகிறது.
உணவருந்தப் பழக்குதல், பொருள்களைக் கையாளக் கற்றுக் கொடுத்தல், விளையாட போதுமான இடம், ஆடைகளைத் தூய்மையாக
வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றைக் கற்றுத் தருவது மிக அவசியமாகிறது.
* தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, கக்குவான், இளம் பிள்ளைவாதம்,
மூச்சுக் கோளாறுகள் போன்ற
நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற உதவுது அவசியம்.
9 முதல் 11 வயது வரை
* குழந்தைகளின் உடல் இயக்கங்களைச் செம்மைப்படுத்த ஆடல், பாடல் உடற்பயிற்சி,
யோகா போன்றவற்றில்
ஈடுபடச் செய்தல்.
* சுயமாக உடல் சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்களை மேற்கொள்ள
உதவுதல்.
* குழந்தைகள் தங்கள் உடல் இயக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், கட்டுப்படுத்தி செம்மைப்படுத்தவும் மற்றும் சிறப்பாக வெளியிடவும்
அதிக வாய்ப்புக்களையும், வசதிகளையும் அளிக்க வேண்டும்.