உடற் பண்புகள் - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II
Child Development and Pedagogy Paper 1,2
உடற் பண்புகள்:
5 முதல் 8 வயது வரை
* ஏறத்தாழ 100 செ.மீ உயரம்(வருட சாராசரி உயர வளர்ச்சி 5 செமீ முதல் 7.5 செமீ வரை).
* செயல்பாடுகள் அனைத்தும் உடல் சார்ந்ததாக இருக்கும்.
* கால்கள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன.
* ஆண்களை விடப் பெண்கள் விரைவில் பருவமடைகின்றனர்.
* தசைகளின் இயக்கம் விரைவாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும்.
* மூக்கு மற்றும் தொண்டைக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.
* உயரம் மற்றும் எடை வளர்ச்சி வீதம் 5 முதல் 11 வயது வரை மெதுவாகவும் நிதானமாகவும் நடைபெறுகிறது.
* வயிறு புடைக்க உணவருந்த விரும்புகின்றனர்.
* கருத்துக்கள் தெளிவற்றதாகவும், ஒழுங்கற்றதாகவும்
இருக்கும்.
* குளிப்பதற்கு மறுப்பர்.
* செயல் வேகத்தில் படிப்படியான முன்னேற்றம காணப்படும். இது
நிதானத்தையும் துல்லியத்தையும் நோக்கி வளரும்.
* உடல் நலம் முன்னேற்றமடையும்.
9 முதல் 11 வயது வரை
* இது முழுக்க முழுக்க செயல்திறன் மிக்க வயதாகும்.
* பொதுவாகத் திடமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ள வயதாகும்.
* தின் பண்டங்கள் மீது அதிக விருப்பம் காட்டுவர்.
* ஆண்கள் வாலிப வயதின் பாதி எடையினைப் பெற்றவர்களாக இருப்பர்.
* பெண்களின் உடல் திறன்கள் 11 வயது வரை மெதுவாகவும், திடமாகவும் முன்னேற்றமடையும். அதன் பின்னர் திறமைகள் நி்லைப்படும்.
* ஆண்களைப் போல பெண்கள் உடல் வலிமைகளையும், ஆரோக்கியத்தையும் அடைய முடிவதில்லை.
* உடல் வலிமை 11 வயது முதல் 13 வயது வரை பெண்களுக்கு
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* போட்டி விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
* உடற் செயல்பாடுகளுக்குப் பின்னர் எளிதில் சோர்வடைகின்றனர்.
* கைகளின் சிறு தசைகள் நல்ல வளர்ச்சியைப் பெறுகிறது.
* வயது அதிகரிக்க அதிகரிக்க நிதானத்தின் வேகம் அதிகரிக்கிறது. அது
துல்லியமாக முன்னேற்றமடைகிறது.
* 11 வயது வரை பெண்களின் உயரம் மற்றும் எடையின் வளர்ச்சி நேர்த்தியாக
உள்ளது. ஆண்களின் வளரச்சி பெண்களை விட நன்றாகவும் உள்ளது.