மறதி – Forgetting
மறதி – Forgetting
* நினைவின் எதிர்மறையான செயல்முறையே மறதி
* முன்பு கற்றலில் சிலவற்றையோ அல்லது முழுமையாகவோ நினைவு கூர்தலில்
ஏற்படும் நிரந்தரமான அல்லது தற்காலிகமான இழப்பு.
* நமக்கு மறதி ஏற்படக் காரணம் நாம் கற்ற ஒன்று நமது நினைவில் தங்காததே
ஆகும்.
மறதியின் வகைகள்
1.இயற்கை மறதி - Passive
or Natural Forgetting
* இத்தகைய மறதி தூண்டுதலினால் நிகழ்வதில்லை. பல்வேறு காரணங்களால்
நிகழ்கின்றது. இது இயற்கை மறதி எனப்படும்.
2. செயற்கை மறதி - Active
or Morbid Forgetting
* இத்தைய மறதி மகிழ்ச்சியற்ற அனுபவம் மற்றும் சுயநினைவில்லாத நிலை
போன்றவற்றால் நிகழ்கின்றது. இது நசுக்குதல் மூலம் நிகழ்கிறது.
மறதிக்கான காரணிகள்
* கற்கும் பொழுது போதுமான அளவு மனதில் பதியாமை
* காலம் கடந்து சென்றமை
* தடை, குறுக்கீடு
* அடக்குதல்
* மனவெழுச்சியின் எழுச்சி
* தூண்டலினால் ஏற்படும் மாற்றம்
* உடல் நலமின்மை மற்றும் குறைபாடு உள்ள மனநிலை
மறுத்தல் கோட்பாடுகள்
* 1. பயன்பாடுத்தாதன் விளைவாக அழிதல்
* 2. குறுக்கீடு காரணமாக மறத்தல்
(அ) முன்னோக்கத் தடை
* ஏற்கனவே கற்ற செயல் தற்போது கற்கும் செயலுக்கு தடையாக அமைவது
பெரும்பாலான சமயங்களில் மறதிக்கு காரணமாக அமைகிறது.
* இதனை விவரித்தவர்கள் ஆசுபெல் மற்றும் ஹண்டர்வுட்
(ஆ) பின்னோக்குத் தடை
* புதிதாக கற்றுக் கொள்ளும் செயல் ஏற்கனவே கற்றுக் கொண்ட செயலினை
நினைவு கூறத் தடையாக அமைவது.
* இதனை விவரித்தவர்கள் முல்லர் மற்றும் பில்சக்கர்.
மறுத்தல் பற்றிய எபிங்காஸின் சோதனையும்,
மறுத்தல் வளைகோடும் - Cure
of Forgetting
* எபிங்காஸ் சோதனைப்படி மறத்தல் விகிதம் தொடக்கத்தில் அதிகமாக
இருக்கும்.
* காலம் அதிகரிக்க அதிகரிக்க மறத்தல் விகிதம் குறையும்.
* கற்றலில் முதல் ஒரு மணி நேரத்தில் அரை பங்கும், 8 மணி நேரத்தில் 2/3
பங்கும், ஒரு வாரத்தில் 4/5
பங்கும், கற்றவற்றில் மறந்து போகிறது.
* கல்லூரி வகுப்பின் 40
நிமிட சொற்பொழிவிற்குபின்
மாணவர்களது நினைவு கூர்தல் 62
சதவீதம், 3 நாட்களுக்குபின் 20
சதவீதம் நினைவு கூர்ந்தனர்.
* எபிங்ஹாஸ் 1885ல் மறதி வைளைகோட்டை வெளியிட்டார். இது
நினைவிலிருத்தல் வளைகோடு எனவும் அழைக்கப்படும்.
கற்றல் மறத்தல் விகிதமும்:
20 நிமிடங்களில், 47 சதவீதம்,
1 நாளில் 66 சதவீதம்,
2 நாளில் 72 சதவீதம்,
6 நாளில் 75 சதவீதம்,
31 நாட்களில் 79 சதவீதம்.
* முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு - இ.எல்.தார்ண்டைக் - சோதனை.- பூனை - சிக்கலறை
* ஆக்க நிலையிறுத்தல் கற்றல் கோட்பாடு - ஐ.பி.பாவ்வோல் சோதனை.- நாய் - உமிழ்நீர்
சுரத்தல்
* செயல்பட்டு ஆக்க நிலை கற்றல் கோட்பாடு - பி்.எப்.ஸ்கின்னர் - சோதனை - எலி, புறா - சோதனை
* உட்காட்சி வழி கற்றல் கோட்பாடு -
கோஹலர் மனிதக் குரங்கு சோதனை
* களக் கற்றல் கோட்பாடு - சூர்த் லெவின் - சோதனை வாழ்க்கை வெளி