ஜீன் பியாஜே அறிதல் திறன் வளர்ச்சி ( Cognitive Development- Piaget) - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II
Child Development and
Pedagogy Paper 1,2
ஜீன் பியாஜே அறிதல் திறன் வளர்ச்சி (Cognitive Development - Piaget)
* தன்னையும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும் மனத்திறனை
அறிதல் திறன் என்கிறோம்.
* அறிதல் திறனில் சிந்தித்தல், நினைவுகூர்தல், மொழியைப் பயன்படுத்துதல், படைப்பாற்றல், நுண்ணறிவு, புரிந்துகொள்ளுதல், பிரச்சனையைத் தீர்த்தல், முடிவு செய்தல் போன்ற பல திறன்கள் அடங்கியுள்ளன. இத்திறன்களின்
வளர்ச்சியையே அறிதல் திறன் வளர்ச்சி என்கிறோம்.
* நெய்சா என்ற அறிஞரின் கருத்துப்படி, புலனுறுப்புக்கள் மூலம்
பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கியமைத்தல், விரிவுபடுத்தல்,
நினைவு கூர்தல் என்ற உளச்
செயல்களின் அடிப்படையில் ஆராய்ந்து அவை பற்றி அறிந்து கொள்ளுதல் அறிதிறன் எனப்படும்.
* வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச் செயல்களே அறிதிறன்
செயல்கள் எனப்படும்.
* அறிதல் திறன் வளர்ச்சி நான்கு படி நிலைகளில் நடைபெறுகிறது
என்று பியாஜே என்ற உளவியல் அறிஞர் குறிப்பிடுகின்றார்.
அதாவது
1. புலனியக்கப் பருவம் Sensory motor state: 0-2 years)
2. மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் (Preoperational Stage: 2-7 years
3. கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும்
பருவம் (Concrete Operational
Stage: 7-12 years
4. முறையான மனச் செயல்பாட்டுப் பருவம் (Formal Operational Stage: above 12 years)
என நான்கு படி நிலைகளில் நடைபெறுகிறது என
சுவிட்சர்லாந்து நாட்டு உளவியலறிஞரான ஜீன் பியாஜே குறிப்பிடுகிறார்.
* ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ கையாள வேண்டும். இவ்வகைச் செயல்களின் தோகுப்பை
ஸ்கீமா என்று பியாஜே அழைக்கிறார்.
* ஸ்கீமா உருப்பெரும் தன்மைக்கேற்ப குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியை
நான்கு நிலைகளாக மேற்கூறியவாறு பியாஜே பிரித்துள்ளார்.
* அறிதல் திறன் வளர்ச்சியில் குழந்தை பிறந்தது முதல் இரண்டு ஆண்டுகள்
வரை உள்ள பருவம் புலனியக்கப் பருவம் எனப்படும்.
* புலனியக்கப் பருவத்தின் தொடக்கத்தில், அதாவது பிறந்து நான்கு
மாதங்கள் வரை குழந்தைகள் பொருளின் நிலைப்புத் தன்மையை உணர்வதில்லை.
* ஒரு பொருள் கண் முன் இல்லையென்றாலும் அப்பொருள் எங்கோ ஒர்
இடத்தில் உள்ளது என்று உணர்ந்து கொள்ளுதல் பொருளின் நிலைப்புத் தன்மையை உணர்தல்
எனப்படும்.
* பொருளின் நிலைப்புத் தன்மையை சுமார் 18 மாதங்கள் ஆன பின்பு குழந்தை
முற்றில்ும் உணர்ந்து கொள்கிறது. இவ்வாறு பொருளின் நிலைப்புத் தன்மையை உணர்தலும், பொருளின் உருவம் மனதில் தோன்றுதலுமே புலனியக்கப் பருவத்தின்
முக்கிய வளர்ச்சியாகும்.
* மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவத்தில் குழந்தைகள் மன உருவங்களைப்
பயன்படுத்துவதில் படிப்படியாக முன்னேறுகின்றன. அதே சமயத்தில் குழந்தையின்
மொழியும் வளர்ச்சி அடைகிறது.
* மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவத்தி்ல் குழந்தைகள் மன உருவங்களைக்
கொண்டு சிந்தனையைத் தொடர்ந்தாலும் இப்பருவத்தில் குழந்தையின் அறிதல் திறன் முழு
வளர்ச்சி அடைவதில்லை. இப்பருவத்தில் குழந்தைகளின் சிந்தனைகளில் சில குறைபாடுகள்
காணப்படுகின்றன.
* குழந்தைகளின் சிந்தனையில் காணப்படும் ஒரே ஒரு கூறில் மட்டும் கவன
செலுத்தும் தன்மை, நடந்து முடிந்த ஒர் நிகழ்ச்சியை மனத்தளவில்
மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாத தன்மை, தன்னை மையமாக்கிச்
சிந்திக்கும் தன்மை, உயிருள்ள பொருள்களையும் உருள்ளவையாக பாவிக்கும்
தன்மை முதலியன.
* ஒரே ஒரு கூறில் மட்டும் கவனம் செலுத்தும் தன்மை என்பது குழந்தைகள்
ஒரு பிரச்சனையின் ஒரே ஒரு கூறில் மட்டும் கவனம் செலுத்தி மற்ற முக்கியக் கூறுகளைப்
புறக்கணிக்கும் பண்பாகும்.
* மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவத்து குழந்தைகள் எல்லாப்
பொருள்களும் தங்களைப் போலவே உயிருள்ளவை என்றும் நம்புகின்றனர்.
* அறிதல் திறனில் ஒரளவு மன உருவங்களைப் பயன்படுத்தும் திறன்
வளர்ந்திருந்தும் அது முழுமையாக வளர்ச்சி அடையாமல் ஆனால் வளர்ச்சி நோக்கி
செல்வதால் பியாஜே இதனை மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் என்ரு பெயரிட்டார்.
* முதல் வகுப்பில் தொடக்கக் கல்வியை தொடங்கும் குழந்தை இன்னும் மனச்
செயல்பாட்டுக்கு முந்தைய பருவத்திலேயே உள்ளதால் அவர்களின் திறன் முழுமையாக
வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.
* நரம்பு மண்டலத்தின் முதிர்ச்சி மற்றும் குழந்தை சூழ்நிலையோடு
கொள்ளும் பொருத்தப்பட்டு ஆகிய இரண்டும் இணைந்து செயலாற்றுவதன் மூலம்
பொருள்களின் மாறாத் தன்மை போன்ற அறிதல் திறன் வளர்ச்சி பெறுகிறது.
* மனிதனை நாகரீக வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு செல்ல மேம்பட்ட
சிந்தனைக்குப் பெரிதும் துணை புரிவது மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவமாகும்.