Search This Blog

அறிதல் திறன் வளர்ச்சி ( Cognitive Development) - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2

 குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II

Child Development and Pedagogy Paper 1,2


அறிதல் திறன் வளர்ச்சி

* குழந்தையின் வளர்ச்சியின் முக்கியக் கூறாக அதன் அறிதிறன் வளர்ச்சி (Intellectual or Cognitive Development) விளங்குகிறது.

* ஒருவர் தனது சுற்றுப்பிறச் சூழலைப் புரிந்து கொள்ளக்கூடிய திறன் வளர்ச்சியை அறிதல் திறன் வளர்ச்சி என்கிறோம். இதற்கு நம் புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி பயன்படுகின்றன.

* ஜீன் பியாஜே என்ற சுவிட்சர்லாந்து அறிவியலறிஞர் தன் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதில் செலவிட்டார்.

* குழந்தைகளின் பிறப்பிலிருந்து எவ்வாறு அறிதல் திறன் வளர்ச்சி அடைகிறது என்பதைநான்கு படிநிலைகளாகப் பகுத்துள்ளார்.

* பியாஜேவின் கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசைக்கிரமமாக அமைந்து படிநிலைகளில் நிகழ்கிறது.

* முதல்நிலை தொட்டு உணரும் பருவம். பிறப்பிலிருந்து 18 மாதம் வரை.

* இரண்டாம் நிலை மனச் செயல்பாடுகளுக்கு முந்தைய நிலை - 18 மாதம் முதல் முதல் வயது வரை.

* மூன்றாம் நிலை புலன்களை உணர்வதை வைத்து சிந்தித்துச் செயல்படும் மனச் செயல்பாட்டு நிலை.

* நான்காம் நிலை முறையாகச் சிந்தித்து எண்ணங்களின் அடிப்படையில் செயல்படும் மனநிலை -12 வயதிற்கு மேல்.

* ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ கையாள வேண்டும். இவ்வகைச் செயல்களின் தொகுப்பை ஸ்கீமா என்று பியாஜே அழைக்கிறார்.

* 3 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகள் புலனியக்கத்திறன், மொழித்திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

* 8 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்குத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்களை அவர்களுக்கு இளமனதில் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url