காதலர் தினம் எப்படி வந்தது? இரண்டு கதை உள்ளே வாங்க பார்ப்போம் - lover's Day History
காதலர் தினம் எப்படி வந்தது? இரண்டு கதை உள்ளே! வாங்க பார்ப்போம்:
காதலர் தினம் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுவது தொடர்பான பல கதைகள் வலம் வருகின்றன.
கதை 1:
பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான் ரோமில் வாழ்ந்த கத்தோலிக்க மத குருவான 'செயிண்ட் வாலண்டைனின்' பெயரால் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன் படி, ரோமப் பேரரசரான 'இரண்டாம் கிளாடியுஸ்' காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளத் தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணமாக இருந்தது. அந்தச் சமயத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என ஆசைப்பட்ட ஆண்களுக்கு அந்நாட்டு பாதிரியார் 'வேலண்டைன்' உதவினார். அரச கட்டளையை மீறி அவர் திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. இந்த நாள் வாலண்டைன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கதை ஒரு புறம் இருக்க.
கதை 2:
பழங்காலத்தில், பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை ரோமானியர்கள் 'லுபர்காலியாவின்' எனும் பண்டிகையை கொண்டாடினர். அதில், ஆண்கள் ஒரு நாயையும், ஆட்டையும் பலியிட்டு அதன் ரோமத்தால் திருமணம் ஆகாதத் தாங்கள் விரும்பும் பெண்களை மென்மையாக அடிப்பார்கள். இது திருமணத்திற்குப் பிறகு தீமையை நீக்கி நல்வாழ்க்கை தந்து கருவுருதலையும் வலுப்படுத்தும் என்பது அவர்கள் நம்பிக்கை. அதனால் தான், அக்காலத்துப் பெண்களும் அதை விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டனர். சில சமயங்களில் இது திருமணமாக மலரும்.
இன்றோ, பெரும்பாலான நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும், இந்த நாளை தங்களது, கலாச்சாரங்களுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொண்டாடி வருகின்றனர். உலகின் சில பகுதிகளில், காதலர்கள், தம்பதியினரைக் காட்டிலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாகக் காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சில நாடுகளில், இந்தக் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு வலிமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. காரணம், அந்த நாடுகள் இதனை ஒரு கலாச்சார சீரழிவாகப் பார்க்கின்றனர்