Search This Blog

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) ஏன் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம்


Republic Day 2023: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. ஆனால் ஏன் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது? இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


இந்தியக் குடியரசு நாள்
 (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக. இந்திய அரசியலமைப்பு  சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.

1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26 ஆம் தேதி விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

12 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் தேதி அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.


2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி  24 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950 ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் தேதியை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு நாளாக  கொண்டாடப்படுகிறது



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url