Search This Blog

Science Box questions, Do you know, 9th std Term iii unit - 8. நுண்ணுயிரிகளின்‌ உலகம்‌

9 ஆம்‌ வகுப்பு - மூன்றாம்‌ பருவம்‌
8. நுண்ணுயிரிகளின்‌ உலகம்‌

1. ஆண்டன்‌ வான்‌ ஜாவன்‌ ஹுக்‌ என்ற நுண்ணுயிரியலாளர்‌ முதன்‌ முதலில்‌ தன்னுடைய நுண்ணோக்கியை வடிவமைத்தார்‌.

2. வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும்‌ ஆர்‌.என்‌.ஏ. வீராய்டு என
அழைக்கப்படுகிறது. இவைகள்‌ தாவர செல்களில்‌ காணப்பட்டு அத்தாவரங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன.

3. கிரூயிட்ஸ்‌ஃபெல்ட்‌ - ஜேக்கப்‌ நோய்‌ நரம்பு மண்டலத்தை சிதைக்கும்‌ ஒரு நோய்‌ ஆகும்‌. இந்த நோயின்‌ விளைவாக செரிப்ரல்‌ கார்டெக்ஸ்‌ (மூளையின்‌ மேற்பட்டை) என்ற பகுதி பாதிக்கப்படுகிறது. முற்றிக்கொண்டே செல்லுகிற மூளைக்கோளாறு நோயான நினைவை இழத்தல்‌, நடத்தையில்‌ மாற்றங்கள்‌, குறைவுபட்ட ஒருங்கிணைப்பு மற்றும்‌ பார்வையில்‌
இடையூறு ஏற்படல்‌ போன்ற பிரச்சனைகள்‌ இதனால்‌ ஏற்படுகின்றன.

4. உலக சுகாதார தினம்‌ - ஏப்ரல்‌ 7

5. உலக மலேரியா தினம்‌ - ஏப்ரல்‌ 25

6. உலக எய்ட்ஸ்‌ தினம்‌ - டிசம்பர்‌ 1

7. உலக காச நோய்‌ எதிர்ப்பு தினம்‌ - மார்ச்‌ 24

8. இராபர்ட்‌ காச்‌ (பாக்டீரியாவியலின்‌ தந்தை) - இவர்‌ முதன்‌ முதலில்‌ நுண்கிருமிகள்‌ எப்படி
நோய்களைத்‌ தோற்றுவிக்கின்றன என்பதை கற்றவராவார்‌.

● 1876 ஆம்‌ ஆண்டு செம்மறி ஆடுகளில்‌ காணப்பட்ட ஆந்த்ராக்ஸ்‌ என்ற நோயானது பேசில்லஸ்‌ ஆந்தராசிஸ்‌ என்ற உயிரியால்‌ உருவாகிறது என்பதைச்‌ சுட்டிக்காட்டினார்‌.

● இந்தநோயால்‌ பாதிக்கப்பட்ட செம்மறி ஆடுகளின்‌ இரத்த நாளங்களில்‌ கோல்‌
வடிவ பாக்டீரியாக்கள்‌ காணப்பட்டதைக்‌ கண்டறிந்தார்‌. செம்மறி ஆடுகள்‌ மற்றும்‌ மாடுகள்‌ மேய்ச்சல்‌ நிலங்களில்‌ மேய்கிறபோது இவ்வகைப்‌ பாக்டீரியங்கள்‌ அவைகளின்‌ உடலுக்குள்‌ செல்கின்றன என்ற முடிவுக்கு அவர்‌ வந்தார்‌.

9. காசநோயைப்‌ பரப்பும்‌ மைக்கோ பாக்டீரியம்‌ டியூபர்குளோசிஸ்‌ பாக்டீரியாவானது ராபர்ட்‌
கோச்‌ என்பவரால்‌ கண்டுபிடிக்கப்பட்டது.

10. மாண்டாக்ஸ்‌ சோதனையானது காசநோயைக்‌ கண்டறிவதற்கான ஒரு குறிப்பிட்ட டியூபர்குளின்‌ தோல்‌ சோதனையாகும்‌.

11. தேசிய காசநாய்த்‌ தடுப்புத்‌ திட்டமானது 1962ம்‌ ஆண்டு துவங்கப்பட்டது.

12. காலரா நோய்‌ விஃப்ரியோ காலரே என்ற உயிரியால்‌ ஏற்படுகிறது என்பதை முதன்‌ முதலில்‌ வெளியிட்டவர்‌ ராபர்ட்‌ காச்‌ ஆவார்‌.

● இந்த பாக்டீரியத்தால்‌ உருவாக்கப்பட்ட காலோரஜன்‌ என்ற தீங்கிழைக்கும்‌ நச்சுப்‌ பொருள்‌ இந்நோயை ஏற்படுத்துகிறது.

13. போலியோ வைரஸானது என்டிரோ வைரஸ்‌ எனவும்‌ அழைக்கப்படுகிறது. இது உணவுக்குழாய்‌ சம்பத்தப்பட்ட இடங்களில்‌ ஏற்படும்‌ நோய்த்தொற்றாகும்‌. 3 முதல்‌ 6
வயது வரையுள்ள குழந்தைகளை இது அதிகமாகப்‌ பாதிக்கிறது.

14. இந்தியாவில்‌ 1995 ஆம்‌ ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும்‌ நிகழ்வானது தொடங்கப்பட்டது.

15. 2011 ஆம்‌ ஆண்டு ஜனவரி 13 ஆம்‌ தேதியிலிருந்து போலியோ நோயினால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ என்று ஒருவரும்‌ இந்தியாவில்‌ இல்லை என அறவிக்கப்பட்டூள்ளது.

* மூன்று வருடங்களில்‌ ஒரு நாட்டிலுள்ள எந்த ஒரு நபரும்‌ போலியோவால்‌
பாதிக்கப்படவில்லையெனில்‌ உலக சுகாதார நிறுவனம்‌ போலியோ இல்லாத நாடு என அந்நாட்டை அறிவிக்கும்‌.

* எனவே, இந்தியாவானது 2014 ஆம்‌ ஆண்டு ஜனவரி 13ஆம்‌ ததி அந்த சிறந்த நிலையை அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16. அறிவியலறிஞரை அறிந்துகொள்வோம்

சர் ரொனால்ட் ராஸ் என்பவர் இந்தியா வில் பிறந்த பிரிட்டிஷ் மருத்துவராவார். இவர் மலேரியாவைப் பற்றிய ஒட்டுண்ணியின் வளரும் நிலைகளானது கொசுவின் இரைப்பை குடல்வழிப் பரவுகிறது எனவும் நிரூபித்தார். உடலியல் நோபல் பரிசைப் பெற்றார்.

தனது ஆய்விற்கு புகழ் பெற்றவர். இவர்  இந்திய மருத்துவத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றினார். தனது ஆராய்ச்சியின் விளைவாக, மலேரியா பகுதியில் நடைபெறுகிறது எனவும், எனவே கொசுவினால்தான் மலேரியா வானது அல்லது மருத்துவத் துறைகளில், மலேரியா பரவும் விதம் பற்றிய தனது கண்டுபிடிப்புக்காக, 1902 ஆம் ஆண்டு, நோபல் பரிசை பெற்றார். 

17. டெங்கு மருத்துவத்தில் மூலிகை பற்றிய உண்மை :
பப்பாளி இலைகளின் கொழுந்திலிருந்து எடுக்கப்பட்டு வடிகட்டப்பட்ட திரவம் மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவை இந்நோய் பாதிக்கப்பட்ட கொடுக்கப்படுகிறது. தட்டுகளின் நோயாளிகளுக்கு இது இரத்தத் எண்ணிக்கையை
அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது.

18.  2009 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதத்தில் பன்றிக்காய்ச்சலானது கண்டறியப்பட்டது. இந்நோய் மில்லியன் மக்களைத் தாக்கியது. எனவே ஜூன் 2009 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (World Health organisation WHO) பன்றிக்காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை நோய் (Pandeic) அறிவித்தது.

2015 ஆம் ஆண்டு, இந்தியாவில் 31,000 மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு அதில் 1900 பேர் இறந்துபோனதாக தகவல்கள் உள்ளன. 2017 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாலத்தீவில். இந்நோய் சிறிய அளவில் பரவ
ஆரம்பித்தது. இந்த பன்றிக்காய்ச்சல் நோயானது உலகளவில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக சுகாதார நிறுவனமானது இந்த நோய்க்கு பெரும் கொள்ளை நோயின் அளவில் 5 ஆம் அளவு எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த அளவானது மனிதர்களிடமிருந்து பிற மனிதனுக்கு நேரடியாக பன்றிக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதைக் காட்டுகின்றது.


19. பறவை இன்ஃபுளுயன்சா
வைரஸ் ஏ (எச் 5 என் 1) 1996 ஆம் ஆண்டு தோன்றியது. இந்த வைரஸால் முதன் முதலில் தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் நோய் தோன்றியதாகக் கண்டறியப்பட்டது. இந்த (எச்,எண்,)H,N, வைரஸ் அதிக அளவில் வளர்ப்புப்  பறவைகளைத் தாக்கியது. எனவே, இதுவொரு கொடுமையான நோயுண்டாக்கும் பறவை இன்ஃபுளுயன்சா வைரஸ் எனப்படுகிறது. எச்5என்1 என்ற வைரஸானது 1997 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் முதலாவதாக மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதல் இந்நோயின் வெளிப்பாடு 2003 ஆம் ஆண்டு டிசம்பரில் அறியப்பட்டது.

20. ரெட்ரோ வைரஸ் எனப்படும் எச்.ஐ.வி (மனித நோய்த் தடுப்புத் திறனை குறைவுபடுத்தும் வைரஸ்) வைரஸால் ஏற்படுத்தப்படும் எய்ட்ஸ் நோயானது முதன்முதலில் அமெரிக்காவில் ஹட்டாய் என்ற இடத்தில் 1981 ஆம் ஆண்டு கண்டுணரப்பட்டது. 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் முதலாவது எய்ட்ஸ் பாதிப்பு என்பது ஆதாரத்துடன் தெளிவாகக் கண்டறியப்பட்டது. இந்த எய்ட்ஸ் பாதிப்பிற்கு எய்ட்ஸ் தடுப்பூசி ஆர்.வி. 144 என்ற மருந்தானது தாய்லாந்து நாட்டில் 2003 ஆம் ஆண்டு சோதனைக்காக வழக்கப்பட்டது. இதனுடைய ஆய்வறிக்கை 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.


21. அமெரிக்காவிலுள்ள தேசிய
சுகாதார நிறுவனத்தில்
பணியாற்றும் ராபர்ட் காலோ
என்பவரும் பாரிஸ்.நாட்டிலுள்ள பாய்ஸ்டர் நிறுவனத்திலுள்ள லூக் மாண்டக்னெர் என்பவரும் 1983 ஆம் ஆண்டு எய்ட்ஸ் ஏற்படுத்தும் நோய்த் தடுப்பாற்றலைக் குறைக்கும் வைரஸ்களை (எச்.ஐ.வி) பிரித்தெடுத்தனர்.

22. தடுப்பூசியிடுதல் நிகழ்வை எட்வர்டு ஜென்னர் என்பவர் அறிமுகப்படுத்தினார். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி, மனித குலத்தினிடையே இருந்த பெரியம்மையானது ஜென்னரின் தடுப்பூசி மூலம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

23.  உ லக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி நோய் எதிர்ப்பு  திறனூட்டலால்‌ ஒவ்வொரு வருடமும்‌ 2 முதல்‌ 3 மில்லியன்‌ (20 - 30
இலட்சம்‌) மக்கள்‌ இறப்பிலிருந்து
தடுக்கப்பருகிறார்கள்‌.

◆ டெங்கு நோய்க்கு எதிராக ஒரு புதிய மருந்தானது பல நாடுகளின்‌ அங்கீகாரத்தினைப்‌ பெற்றுள்ளது.

◆ 2018 ஆம்‌ ஆண்டு மூன்று ஆப்பிரிக்க நாடுகளில்‌ உள்ள குழந்தைகளை
மலேரியா நோயிலிருந்து பாதுகாப்‌பதற்காக முதன்முதலில்‌ நோய்த்‌ தடுப்பு மருந்தானது முன்னோட்டமாக
வழங்கப்பட உள்ளது.

◆ உலகளவில்‌, தட்டமையால்‌
இறந்தவர்களின்‌ விகிதமானது
7 சதவீதமாகக்‌ குறைந்துள்ளது.

24. அறிவியலறிஞரை அறிந்துகொள்வோம்‌

லூயிஸ்‌ பாய்ஸ்டர்‌
என்பவர்‌ 18 ஆம்‌ நூற்றாண்டின்‌ பிரான்ஸ்‌ நாட்டைச்‌ சார்ந்த
வேதியியலாளர்‌ மற்றும்‌
நுண்ணுயிரியலாளர்‌
ஆவார்‌. இவர்‌ நோய்த்‌ தருப்பு மருந்தளித்தல்‌ மற்றும்‌ பாஸ்டுரைசேஷின்‌ என்ற நிகழ்விற்கு பெயர்‌ பெற்றவர்‌. இவர்‌ காலாரா, ஆந்த்ராக்ஸ்‌ மற்றும்‌ பிற நோய்களுக்கு மருந்தை உருவாக்கினார்‌. பாய்ஸ்டர்‌ தான்‌ கண்டறிந்த முதல்‌ தருப்பு மருந்தினை நோய்வாய்ப்பட்ட ராபிட்‌ நாயால்‌ பலமுறை கடிபட்ட ஜோசப்‌
மய்ஸ்டர்‌ என்ற ஒரு இளைஞனுக்கு செலுத்தினார்‌. ஐந்த இளைஞனுக்கு குறைவான வீரியமுடைய அல்லது பலமிழக்கப்பட்ட ரேபிஸ்‌ வைரஸ்‌ தயாரிப்பை மருந்தாகக்‌
கொடுத்தார்‌; அவனும்‌ பிழைத்தான்‌. இதன்‌ மூலம்‌ வீரியம்‌ குறைத்தல்‌ அல்லது பலமிழக்கச்‌ செய்தல்‌ போன்ற செயல்களைக்‌ கண்டறிந்தார்‌. நோய்‌ பரப்பும்‌ கிருமிகளின்‌ தண்மையை
மாற்றி நோய்‌ எதிற்ப்புத்‌ திறனைத்‌ தூண்டிவிரும்‌ தன்மையை இவர்‌
கண்டறிந்தார்‌.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url