பனிக்கட்டியை உருகாது வைத்திருக்க மரத்தூள் இடுதல் ஏன்?
பனிக்கட்டியை உருகாது வைத்திருக்க மரத்தூள் இடுதல் ஏன்?
பனிக்கட்டியின் உருகுநிலை ழு°ஊ ஆகும். எனவே, சூழல் வெப்பநிலை இதைவிட அதிகமாக இருக்கும் பொழுது அது சூழலில் இருந்து வெப்பத்தைப் பெற்று உருகும்.
பனிக்கட்டியை சுற்றி மரத்தூள் இட்டு வைக்கப்படும் பொழுது சூழலில் இருந்து பனிக்கட்டி வெப்பம் பெறுவது குறைக்கப்படும். ஏனெனில், மரத்தூள் வெப்ப அரிதிற் கடத்தியாகும். அதாவது வெப்பத்தை நன்கு கடத்த மாட்டாது.
பனிக்கட்டி பெறும் வெப்பம் குறைவதால் அது உருகாது இருக்கும். எனவேதான் பனிக்கட்டியை உருகாது வைத்திருக்க மரத்தூள் இட்டு வைப்பார்கள்.