ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க காரணம் என்ன..?
ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க காரணம் என்ன..?
எந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலக்கூறுகளுக்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை நிலவுகிறது. இவ்விசையினை பிணைப்பு விசை என்பர்.
ஆனால் இருவேறு பொருட்கள் ஒன்றோடொன்று சேரும்போது, அவற்றின் மூலக்கூறுகளுக்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை உண்டாகிறது. அதனை ஒட்டு விசை எனக் கூறுவர்.
மணலும், தண்ணீரும் கலந்த ஈர மணலின் மூலக்கூறுகளுக்கிடையே உண்டாகும் ஒட்டு விசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிகவும் வலிமையானதாகும்.
தண்ணீரும், மணலும் கலந்த கலவையின் மூலக்கூறுகளுக்கிடையே உண்டாகும் இத்தகைய வலிமையான ஒட்டு விசையின் காரணமாக ஈர மணற்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்பட்டு அதன் மீது எளிதாக ஓடவும், நடக்கவும் முடிகிறது.
ஆனால் உலர்ந்த மணலின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையானது மணலின் துகள்களை ஒன்றோடொன்று இறுக்கமாக ஒட்ட வைப்பதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் மணற்பரப்பானது கெட்டித்தன்மை குறைந்து தளர்ச்சியாக இருக்கும்.
இந்நிலையில் யாரேனும் நடந்தால், உடல் அழுத்தம் காரணமாக அவரது கால்கள் உலர்மணலில் ஆழமாகப் பதிந்து, மணற்பரப்பில் எளிதாக நடக்க இயலாமல் போகிறது.