அக்டோபர் 28 - சர்வதேச அனிமேஷன் தினம் ( International Animation Day)
சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக 'சர்வதேச அனிமேஷன் தினம்" கொண்டாடப்படுகிறது.
1892ஆம் ஆண்டு சார்லஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியூசியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுக்கூறும் விதமாக, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association ASIFA), 2002ஆம் ஆண்டு இந்நாளை அறிமுகப்படுத்தியது.