சாப்பிடும் பொழுது சிரித்தால் புரையேறுவது ஏன்?
நாம் உண்ணும் உணவு வாய்க்குழியில் இருந்து களத்தினூடாக இரைப்பைக்குள் செல்லும். உள்மூச்சின் போது காற்று வாய்க்குழியில் சென்று வாதனாளி ஊடாகச் செல்லும். களத்தின் முன்னால் வாதனாளி இருப்பதால் உணவு விழுங்கப்படும் பொழுது வாதனாளி மூச்சுக்குழல் வாய் மூடியால் மூடப்படும். சிரிக்கும் பொழுது வெளிவரும் வெளிமூச்சு, மூச்சுக்குழல் வாய் மூடியைத் திறப்பதால், உணவு அதனுள் செல்வதால் சாப்பிடும் பொழுது சிரித்தால் புரையேறுகிறது.