மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது ஏன்?
மீன் செவுள்கள் (Gill) நீரில் கரைந்துள்ள காற்றை பிரித்தெடுக்கும் தன்மை கொண்டவை. அவற்றால் வளிமண்டலத்தில் உள்ள காற்றை நேரடியாக உறிஞ்சிக் கொள்ள முடியாது. எனவே மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் சுவாசிக்க முடியாமல் அது இறந்து விடுகிறது.