கோடை காலங்களில் கருப்பு நிற ஆடைகளை விட வெண்ணிற ஆடைகள் வசதியாக இருப்பதேன்?
வெண்ணிற ஆடைகள் வெப்பத்தை மிகவும் அழகாகப் பிரதிபலிக்கக் கூடியவை. மேலும், அவை வெப்பத்தைக் குறைந்த அளவே உறிஞ்சிக் கொள்ளும் திறன் கொண்டவை. ஆனால் கருப்பு நிற ஆடைகள் வெப்பத்தை அதிகம் உறிஞ்சிக் கொள்ளும். அதனால், வெயில் காலங்களில் வெண்ணிற ஆடைகள் சவுகரியமாக இருக்கின்றது.