வெப்பம் மிகுதியாக இருக்கும் நாளில் நமக்கு அதிகமாக வியர்த்து கொட்டுவது ஏன்?
உடம்பில் வெப்பம் அதிகரிக்கும் போது வியர்வைச் சுரப்பிகளும் அதிகம் தூண்டப்பட்டு வியர்வை பெருகும். உடம்பைக் குளிர்ச்சியாக வைப்பதற்கு இயற்கையாக பார்த்து வைத்திருக்கும் வழி அது. வியர்வை ஆவியாகும் போது உடல் சூட்டையும் எடுத்துச் செல்கிறது. அதனால், உடலின் வெப்பம் குறைகிறது.