சென்னை தினம்:
ஆகஸ்ட் 22-
சென்னை தினம்:
பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று பிறந்த நாள்...!!!
🎪 சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.
🎪 பத்திரிக்கையாளர்களான சசி நாயர்இ மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசாஇ மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.
🎪 முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சிஇ உணவுத் திருவிழாஇ மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.