Search This Blog

ஆடி - 1 - தேங்காய் சுடும் பண்டிகை

*ஆடி - 1 - தேங்காய் சுடும் பண்டிகை
அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச
நாள்.*

ஆடி மாதம் இன்று ஆரம்பம் ஆகிவிட்டது, இனி எல்லா ஊர்களிலும் மாரியம்மன் பண்டிகை நடத்துவார்கள், கூழ் ஊத்துவார்கள், ஆடி 18 வந்தால் காவிரி ஆறு போகின்ற பக்கமெல்லாம் அமர்க்கலமா இருக்கும்.

*ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா?* தேங்காய்
சுடுவதுதான்.

*தேங்காய் எவ்வாறு சுடுவது?*
தேங்காய்க் கண்களை ஓட்டையிட்டு நீரை வடித்துவிட்டு அதில் லேசாக வறுத்தஎள்,பச்சரிசி,உடைத்த பச்சைப்பயிறு, நாட்டுசர்க்கரை கலந்த கலவையை ஊசிமூலம் குத்தி முக்கால் பங்கு நிரப்பி சிறிதளவு தேங்காயில் இருந்து வடித்த நீரை சேர்க்க வேண்டும். பின்பு அழிஞ்சில் குச்சியை சரியாகச் செதுக்கி தேங்காய்க் கண்ணில் செருகி தேங்கய்,குச்சி ஆகியவற்றுக்கு மஞ்சள் பூசி தேங்காய் சுடப் படவேண்டும்.

சுட்ட தேங்காயை அருகில் உள்ள கோயிலுக்கு எடுத்துச் சென்று உடைத்து அங்கே சிறிதளவு வைத்துவிட்டு வழிபட வேண்டும்.
உள்ளே வைத்த கலவை வெந்து தனி ருசியாக இருக்கும். தேங்காயில் உள்பக்க நாட்டு சர்க்கரையின் இனிப்பும் ஏறி சுட்ட தேங்காயின் மணத்துடன் ருசியாக இருக்கும்.

*தற்பொழுது இந்த பண்டிகை அனைவராலும் மறக்கபட்டு வருகிறது*

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url