Search This Blog

மின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்

நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பயன்படுத்தி ஒளி பெற்று வந்தார்கள் பட்டனைத் தட்டியதும் பல்பு எரியக்கூடிய மின்சாரம் அப்போது கிடையாது இப்போதோ ஏராளமான வடிவங்களில் மின்சார விளக்குகள் நமது வாழ்க்கையில் பயன்படுகின்றன தொழிற்காலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்கள் எல்லாமே மின்சாரத்தினால் இயக்கப்படுகின்றன.

நாம் அடிக்கடி பயன்படுத்துகிற ரயில், விமானம், தண்ணீர் இறைக்கும் மோட்டார் போன்ற முக்கியமானவை எல்லாமே மின்சாரத்தின் பயனால் உருவானவையே மனித குலமான நமக்கு மின்சாரம் ஒரு வரப்பிரசாதமாகும்.

மின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரத்தை ‘டைனமோ’ அல்லது ‘ஜெனரேட்டர்’ என்று கூறுகிறார்கள். இதில் பெரியதும், சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது இந்த காந்த்த்தை ‘புலக் காந்தம்’ (Field Magnet) என்று வழங்குகிறார்கள் புலக் காந்தத்தின் இரண்டு உலோக வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும் இந்த வளையங்கள் வெளியேயுள்ள கார்பன் துண்டு ஒன்றைத் தொட்டுக் கொண்டிருக்கும்.

டைனமோவில் உண்டாக்கப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள் கார்பன் துண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் முன்னரே கூறியபடி செம்புக் கம்பிகளால் செய்யப்பட்ட நீளமான, சதுர வடிவிலான கம்பி, காந்தத்தின் இரண்டு முனைகளுக்கு இடையிலே சுழலும் போது மின் காந்த்த் தூண்டல் (Electro Magnetic Induction) ஏற்பட்டு இதன் காரணமாக மின்சாரம் உற்பத்தியாகிறது. இப்படி உற்பத்தியாகும் மின்சாரம், உலோக வளையங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் கார்பன் துண்டு வழியாக மின்சாரக் கம்பிகளில் பாய்கிறது. இந்தக் கம்பிகளை நமது வீடுகள் அல்லது தொழிற்சாலைகள் வரையிலும் இணைத்துக் கொண்டு நாம் மின்சாரம் பெறுகிறோம்

டைனமோவில் செம்புக் கம்பிச் சுருளை சுழலச் செய்ய இரண்டு முறைகள் உள்ளன முதல் முறையின்படி ஆறுகளின் நடுவே அணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி, தோக்கிய தண்ணீரை மிகவும் உயரமான இடத்திலிருந்து கீழே விழச் செய்கிறார்கள் இந்த நீர் டர்பைன் பிளேடுகளில் விழுந்து, டர்பைன் சுற்றி, இதன் மூலம் டைனமோவின் கம்பிச்சுருள் சுழலுகிறது இதன் விளைவாக மின்சாரம் உண்டாகிறது இந்த முறையில் செயல்படும் மையங்களை நீர் மின் நிலையங்கள் என்று அழைக்கிறார்கள்

இரண்டாவது முறையின் படி நிலக்கரியை எரித்து நீரைக் கொதிக்க வைத்து, கிடைக்கும் நீராவியைக் கொண்டு டர்பைன் சுழலுகிறது இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை அனல் மின்நிலையங்கள் என்று வழங்குகிறார்கள் இந்த இரண்டு வகையான முறைகள் தவிர அணுசக்தியைப் பயன்படுத்தியும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது இந்தவகையான நிலையங்களை அணுமின் நிலையங்கள் என்று கூறுகின்றார்கள்

அனல் மின் நிலையம்:

அனல் மின் நிலையம் (Thermal Power Plant) என்பது மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களில் ஒன்றாகும் இவ்வகை மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழற்றப்படும் போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்து, அதனால் நீராவிச்சுழலியை இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.

இந்த முறையிலான மின்னுற்பத்திக்கு நீர், நிலக்கரி ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள்:

காந்திநகர் அனல்மின் நிலையம் குஜராத்

ராஜீவ் காந்தி அனல்மின் நிலையம் ஹரியானா

சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் மத்தியப் பிரதேசம்

துர்காபூர் அனல்மின் நிலையம் மேற்கு வங்காளம்

பானிபட் அனல்மின் நிலையம் 1 ஹரியானா

ராஜ்காட் மின் நிலையம் தில்லி

தூத்துக்குடி அனல்மின் நிலையம் – தமிழ்நாடு

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url