Search This Blog

வட்டப் பரப்பு காண வழி முதலில் சொன்னவர் தமிழர்! – மஞ்சை வசந்தன்

வட்டப் பரப்பு காண வழி
முதலில் சொன்னவர் தமிழர்!
– மஞ்சை வசந்தன்:

வட்டத்தின் பரப்பளவு πr2 என்பது தற்காலத்தில் கணிதச் சூத்திரமாக பயன்படுத்துகின்றனர். இச்சூத்திரம் சொல்லப்படுவதற்கு சில ஆயிரமாண்டுகளுக்கு முன்பே, கணக்கதிகாரம் என்னும் நூலில் பாடல்வடிவில், அதற்கான வழியைப் பதிவு செய்துள்ளனர் தமிழர்கள்.

"வட்டத்தரை கொண்டு விட்டத் தரைதாக்கச்
சட்டெனத் தோன்றும் குழி"
– (கணக்கதிகாரம் 46)

இதன் பொருள்:

வட்டத்தரை என்பது சுற்றளவில் பாதி
விட்டத்தரை = விட்டத்தில் பாதி
சுற்றளவில் பாதியை விட்டத்தில் பாதியால் பெருக்க பரப்பளவு கிடைக்கும் என்றனர்.

எடுத்துக்காட்டு:
விட்டம்: 14;
வட்டம்: 44

விட்டத்தில் அரை = ஆரம்(r) = 7
r = 7

வட்டத்தில் அரை 44/2 = 22.

22 X 7 = 154

வட்டத்தின் பரப்பு = 154

தற்கால சூத்திரப்படி வட்டத்தின் பரப்பு = π r2

= 22 / 7 X 7X7 = 154
படியுங்கள் தமிழர் பெருமை பரப்புங்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url