ஜனவரி 15 - இந்திய ராணுவ தினம்:
ஜனவரி 15 - இந்திய ராணுவ தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிதான் பதவி ஏற்றார். அதற்கு முன்புவரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள். இவர் ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தவர்.