Search This Blog

அக்டோபர் 31 - தேசிய ஒற்றுமை நாள்- சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்:

அக்டோபர் 31 - தேசிய ஒற்றுமை நாள்-
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்:

இந்தியாவின் 'இரும்பு மனிதர்" என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும், நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை, எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்ய, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அகமதாபாத்தில் தன் வக்கீல் தொழில் மூலம் உள்ள+ர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917ம் ஆண்டு அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்ட இவர் 75வது வயதில் (1950) மறைந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url