அக்டோபர் 31 -உலக சிக்கன தினம்: (இந்தியா அக்டோபர் 30)
அக்டோபர் 31 -உலக சிக்கன தினம்:(இந்தியா அக்டோபர் 30)
சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு 1924ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டுக்குப் பிறகு மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டுமென உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.
உலக சிக்கன தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே இத்தினம் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய நோக்கமாகும்.