மார்ச் 14 - பை நாள் (Pi Day )
பை நாள்
பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது.
அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும்.
இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக π ஐயும் குறிக்கும்.
இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.
(π = 3.1415926).
பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ( π யின் பரவலாக அறிந்த அண்ணளவு ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது.
அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.
π நாள் முதன்முறையாக
1988 இல்
கலிபோர்னியாவில் உள்ள
அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது.
அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது.
அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது .
லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.
பை நாள் கொண்டாடப்படும் நாட்கள் :
பெப்ரவரி 27 - ஆண்டு தொடக்க நாளில் இருந்து பூமி தனது ஒழுக்கை 1 ரேடியன் அளவு சுற்றிவரும் நாள்.
மார்ச் 14 - 3.14
ஜூலை 22 : 22/7
நவம்பர் 10 : ஆண்டின் 314வது நாள் (நெட்டாண்டுகளில்
நவம்பர் 9 )
டிசம்பர் 21 , பிப 1:13: ஆண்டின் 355வது நாள், 1:13 மணிக்கு (இது சீன அண்ணளவாகும் (355/113)