செப்டம்பர் 10 - உலக தற்கொலை தடுப்பு தினம் :
உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தற்கொலையை தடுப்பதற்காக சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்த தினத்தை பிரகடனம் செய்தது.
கடந்த 2011-ம் ஆண்டில் சுமார் 40 நாடுகள் உலக தற்கொலையை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார்.
தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
தற்கொலை செய்வதை தடுக்க அதை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால்தான் இந்த கொடிய நோயை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.