உலக புற்றுநோய் தினம். (World Cancer Day) :
உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகளவில் புற்றுநோய் ஒழிப்பிற்கான மாநாடு பாரிஸ் நகரில் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 4இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் புற்றுநோயை ஒழிப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வி, விழிப்புணர்வு மூலமாக புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சிகிச்சைமுறையை சமூகத்திற்கு எடுத்து கூறுவது போன்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.