இந்திய தியாகிகள் தினம்:
இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகிகள் தினம் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தேசத் தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதியை இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இதற்கு மதிப்பளிக்கும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. தியாகிகளின் வீரச் செயல்களை நினைவுபடுத்தி இளம் தலைமுறையினரிடம் நாட்டுப் பற்றை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.