அப்படியா?
கணினியை பயன்படுத்துபவர்கள் சராசரியாக 1 நிமிடத்திற்கு 7 முறை கண்களை சிமிட்டுகிறார்கள்.
வங்காள நாட்டின் தேசிய மரம் மா மரமாகும்.
ரோமன் எண்களில் குறிப்பிட முடியாத ஒரே எண் பு+ஜியமாகும்.
வாழை என்ற வார்த்தை அரபு மொழியில் விரல்களைக் குறிக்கும்.
ஒரு மணிநேரம் தொடர்ந்து பாடல்களை காதொலிப்பான் மூலம் கேட்டால், காதுகளில் 700 மடங்கு பாக்டீரியா அதிகரிக்கும்.
முதல் உலகப் போரின் போது பிரான்ஸில் வெடித்த குண்டுச் சத்தம் லண்டன் வரை கேட்டது.
வாழைப்பழம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உலகின் மிக உயரமான மரம் ஹைபெரியன்.
முதல் வெற்றிகரமான மின்சார மகிழுந்து 1891 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
குரங்குகள் பல ஒலிக் குரல்கள், உடல் இயக்கங்கள் மற்றும் முக பாவனைகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.