நவம்பர் 17- சர்வதேச மாணவர் தினம்:
சர்வதேச மாணவர் தினம், மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது.
1939ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் மாணவர் தலைவர்கள் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்ட சம்பவம், செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்பு போன்ற நிகழ்வுகளை இந்நாள் நினைவூட்டி வருகிறது.
இத்தினம் முதன் முதலில் 1941ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது.