சர்வதேச முதியோர் தினம்
சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
வயதான மூத்த குடிமக்களுக்கும் உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் 40 சதவீதம் பேர், வாரிசுகளால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரை அன்புடன் பராமரித்தாலே, முதியோர் இல்லங்கள் பெருக வாய்ப்பில்லை. தவறினால், 'மண்ணில் ஒரு நரகம், முதியோர் இல்லம்" என்ற வாக்கியம் உண்மையாகி விடும்.