Search This Blog

மார்ச் 20: - உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day- WHSD): -மார்ச் 20

மார்ச் 20:

உலக சிட்டுக்குருவிகள் நாள்(World HouseSparrow Day- WHSD):

ஆண்டுதோறும்
மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

சிட்டுக்குருவிகளின்எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன்
காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும்
பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு
விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டில் இருந்து உலக
சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

மனிதரைச் சுற்றியுள்ள பொதுவானஉயிரியற் பல்வகைமை(biodiversity) மற்றும்
அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள்
நினைவுகூரப்படுகிறது.

2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப்
பாதுகாப்போம்" (We will save our House Sparrows) என்பதாகும்.

மனிதன் வசிப்பிடத்தை, தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன்
குடும்பத்தையும் இணைத்து வாழும் பறவை சிட்டுக்குருவி!

அடையாளம்: மிகச் சிறிய பறவை. சிறிய கால்களுடன், இளம் சாம்பல் கலந்த
பழுப்பு நிறத்தில் இருக்கும்.நீளம்: 8 - 24 செ.
மீஎடை: 27 - 39 கிராம்

வாழும் நாடுகள்: ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களில்
வாழ்கின்றன.வாழ்நாள்: சுமார் 13 ஆண்டுகள் 15 நாட்களில் குஞ்சுகள்
வெளிவரத் தொடங்கும்.

வாழை, தென்னை நார்களை வைத்துக் கூடு கட்டுகின்றன. கூட்டில்
முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. 3 முதல் 5 முட்டைகள் இடும்.
முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்.

முக்கிய உணவு: நெல், சோளம், மக்காச் சோளம், பயறு வகைகள், கோதுமை,
புல்லரிசி. இனப்பெருக்க காலத்தில், புரதம் தேவைப்படுவதால் புழு, பூச்சி,
வண்டு இவற்றையும் உண்ணும். குஞ்சுகளுக்கும் இற்றையே உணவாக ஊட்டுகின்றன.
ஆக, பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன.

அட, நம்மைச் சார்ந்துதான் வாழுது!'

கரோலஸ் லின்னேயஸ்' (Carolus Linnaeus).உயிரியல் ஆய்வாளர், ஸ்வீடன்: நவீன
வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்பட்ட இவர்,உயிரினங்களின் முதல்
பட்டியலை 1758ஆம் ஆண்டு வெளியிட்ட போது, அந்தப் பட்டியலில்
சிட்டுக்குருவியும் இருந்தது. லின்னேயஸ், அறிவியல் பெயர் சூட்டிய முதல்
விலங்கு சிட்டுக்குருவிதான். பாசெர் டொமெஸ்டிகஸ் (Passer domesticus)
என்பதுதான் அந்தப் பெயர்.

* புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, களவழி நாற்பது ஆகிய தமிழ் இலக்கிய
நூல்களில், குருவி என்பது 'குரீஇ' என்றுகுறிப்பிடப்படுகிறது.

* சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற நூல்களில் 'குருவி' என்றே
குறிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நகரமயமாக்கல் காரணமாக விளைநிலங்கள் எல்லாம் கான்கிரீட்
கட்டடங்களாக மாறுகின்றன. இதனால், சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்களும்
அழிந்து வருகின்றன. அழிந்துவரும் சிட்டுக்குருவிகளைக் காக்க பல
நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

கடந்த 2012ல் டில்லியின் மாநிலப் பறவையாக சிட்டுக்குருவியை அறிவித்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url