300 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கை தீர்த்து வைத்த பேராசிரியர் !

சுமார் 300 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கணித சமன்பாட்டுக்கு
இங்கிலாந்து பேராசிரியர் ஒருவர் தீர்வு கண்டுபிடித்துள்ளார். இதற்காக
அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
1637ம் ஆண்டு பிரெஞ்சு கணிதவியலாளர் பெய்ரி டி ஃபெர்மட் உருவாக்கிய
சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஏராளமானோர் முயற்சித்தனர்.
கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கணிதவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து
வந்த இந்த சமன்பாட்டிற்கு 62 வயதாகும் ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித
பேராசிரியர் தீர்வை கண்டுபிடித்துள்ளார்.
There are no whole number solutions to the equation xn + yn = zn when
n is greater than 2 என்னும் இந்த சமன்பாட்டை தான் ஃபெர்மட் நிறுவினார்.
இதனை ஃபெர்மட் தேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது.
1990களில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்த
ஆண்ட்ரூ 1994ம் ஆண்டே இந்தகணித சமன்பாட்டிற்கு தீர்வினை கண்டுபிடித்தார்.
அவர் தீர்வு கண்டுபிடித்த இந்த சமன்பாட்டிற்காகதான் தற்போழுது பாராட்டி
அவருக்கு ஏபேல் பரிசானது வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.4.7 கோடி.
இந்த பரிசு சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்படும் உயரிய கவுரவமாக
கருதப்படுகிறது.
இது குறித்து கணிதவியலாளர்ஆண்ட்ரூ வில்ஸ் கருத்து கூறும்போது, ஃபெர்மட்
தேற்றத்திற்கு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என அவரது சிறுவயதிலிருந்தே
மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் அதற்காக பல ஆராய்ச்சிகளில்
ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த சமன்பாட்டிற்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டதின் மூலம் இன்றைய இளம்
கணிதவியலாளர்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞானிகள் இன்னும் பல
ஆராய்ச்சிகளில்ஈடுபட பெரும் தூண்டுதலாக இருக்கும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார். மேலும் இந்த உலகத்தில் தீர்க்க முடியாத சிக்கல்கள்
என்று எதுவும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
http://ns7.tv/ta/oxford-professor-wins-%C2%A3500000-solving-300-year-old-mathematical-mystery.html