Search This Blog

'பறக்கும் பணம்'(Flying Money)

பறக்கும் பணம்:

காகிதத்தால் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளையும், உலோகத்தால்
செய்யப்பட்ட நாணயங்களையும் நாம் பயன்படுத்துகிறோம்.
ஆரம்பத்தில் நாணயங்கள்தான் புழக்கத்தில் இருந்தன.
பிறகு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்தோம்.
ரூபாய் நோட்டுகளை, ஏழாம் நூற்றாண்டில் சீனர்கள்தான் முதலில் பயன்படுத்த
ஆரம்பித்தார்கள்.
அங்கு 'டாங்' (Tang) என்ற அரச வம்சத்தினர் ஆட்சி செய்தனர்.
அவர்கள்தான் காகிதத்தில் ரூபாய் நோட்டுகளைத் தயாரித்தார்கள்.
அதற்கு முன்பாக செப்பு (காப்பர்-copper) நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
நாணயங்கள் கனமாக இருந்ததால், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக்
கொண்டு செல்ல சிரமமாக இருந்தது.
அதைப் போக்கவே காகிதத்தால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சிட்டார்கள்.
அப்படி அச்சிட்ட பணத்துக்கு
'பறக்கும் பணம்'(Flying Money) என்று பெயர் வைத்தார்கள்.
காகிதப் பணத்தைத் தயாரித்த சீனர்கள்தான், முன்னதாக காகிதத்தையும்
கண்டுபிடித்தவர்கள்!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url