மார்ச் 29
மார்ச் 29:
சாம் வால்டன்:
உலகப் புகழ்பெற்ற வால் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் மோர் வால்டன் அவர்கள் 1918 ஆம் ஆண்டு மார்ச் 29 அமெரிக்காவின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் படிக்கும் காலத்தில் ஈகிள் ஸ்கவுட் சேவைப் படைக்குத் தேர்வு செய்யப்பட்டார். மாநில கால்பந்து அணிக்கு தலைமை வகித்தார். ஓட்டப் பந்தய வீரராகவும் இருந்தார். 1942இல் ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் பதவி வரை உயர்ந்தார். ரோஜர்ஸ், அர்கன்சாஸ் ஆகிய இடங்களில் 1962இல் வால் மார்ட் டிஸ்கவுன்ட் சிட்டி ஸ்டோர் தொடங்கினார். தற்போது 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு வேலை செய்கின்றனர். சிறு ஊர்களிலும் தன் கடைகளைத் தொடங்கினார்.
டைம்ஸ் பத்திரிகை 20ஆம் நு}ற்றாண்டின் செல்வாக்கு மிக்க நபராக இவரை தேர்ந்தெடுத்தது. " Presidential Medal of Freedom" பதக்கம் பெற்றார். "சில்லறை வர்த்தகத்தில் நம்பர் ஒன் நிறுவனம்" என்று போர்ப்ஸ் இதழில் தொடர்ச்சியாக 8 முறை அங்கீகரிக்கப்பட்டது வால்மார்ட். இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு கிளையும் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து கல்லு}ரியில் சேர்ந்து படிக்க உதவுகிறது. அமெரிக்காவின் சிறந்த தொழிலதிபரும் வறுமை நிலையில் இருந்து கோடீஸ்வரரானதோடு லட்சக்கணக்கானவர்களை முன்னேற வைத்த சாம் வால்டன் தனது 74 வயதில் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மறைந்தார்.
உலக புவி மணி நேரம் உலகமயமாக்கப்பட்ட தினம்:
உலகில் உள்ள அனைத்து, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வே உலக புவி மணி நேரம் என்பதாகும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சர்வதேச இயற்கை அமைப்பு இந்த புவி மணி நேரத்தை அறிமுகப்படுத்தியது. 2007 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி 7.30 முதல் 8.30 வரை சிட்னியில் முதல் எர்த் ஹவர் ( Earth Hour) கடைபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 2008ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி இந்த நிகழ்வு சர்வதேச மயமாக்கப்பட்டது.
அமெரிக்காவின் பத்தாவது ஜனாதிபதி ஜான் டைலர் 1790 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் பிறந்தார்.
கனடாவிலுள்ள கியூபெக் என்ற மாகாணம் 1632 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்காரர்களிடம் கைமாறியது.
1831 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.
1886 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.
2002 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி உலகின் முதல் குளோனிங் முயல்களை பிரான்ஸ் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர்.