மார்ச் 22 உலக தண்ணீர் தினம்
♣தண்ணீர் தேசம்♣
★'காசைத் தண்ணீர் மாதிரி செலவு செய்யாதே' என்ற அறிவுரையை நாம் அடிக்கடி
கேள்விப் படுவோம். காசை சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்ற அறிவுரை
சரிதான். ஆனால், தண்ணீரை, தாராளமாகச் செலவு செய்யலாமா?
கூடாது என்று சொல்வதை விட, அது இனி சாத்தியம் இல்லை என்றுதான் சொல்ல
வேண்டும். காசை விடத் தண்ணீர் மதிக்கப்பட வேண்டியது ஏன்?
★உலகில் ஒன்பது நபர்களில் ஒருவருக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை.
★ நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு துளி நீரும் புதுசு கிடையாது. 2 கோடி
வருடங்கள் பழசு. இயற்கையாக நடக்கும் மறுசுழற்சி மூலம் நமக்குப் புதிதாகக்
கிடைக்கிறது.
★ மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சுகாதாரமான குடிநீர்
கிடைக்கவேண்டும். இதை வலியுறுத்தும் நோக்கில் 1993ஆம் ஆண்டில் இருந்து
மார்ச் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக ஐ.நா. கடைபிடித்து வருகிறது.
★ 2.5% உலகில் உள்ள சுத்தமான தண்ணீர்.
★ 30% நிலத்திடியில்
★ 68% பனிமலைகளில், நிரந்த உறை பனியில்
★ 2% ஆறுகள், ஏரிகள்.
தண்ணீர் பயன்பாடு எதற்கு? எவ்வளவு?
★ 70% விவசாயம்
★ 20% தொழிற்சாலைகள்
★ 10% வீட்டுப்பயன்பாடு.
நகர்புற வீடுகளில் ஒருவர் எவ்வளவு தண்ணீர்செலவழிக்கிறார் தெரியுமா?
★ பாத்திரம் கழுவ 30 லிட்டர்* குளிக்க 80 லிட்டர்* கழிப்பறை 65 லிட்டர்*
துணி துவைக்க 100 லிட்டர்
அப்போ ஒருவர் ஏழத்தாழ 300 லிட்டர் செலவழிக்கிறார் அப்படித்தானே இல்லை!
ஒரு நாளைக்கு 5000 லிட்டர் தணணீர் செலவழிக்கிறோம்.
நேரடியாக இல்லை! மறைமுகமாக இதற்கு 'வர்ச்சுவல் வாட்டர்' என்று பெயர்.
அப்படியா!
★ நகர்ப்புறங்களில் 50% குடிநீர் குழாய் கசிவில் வீணாகிறது.
★ வளரும் நாடுகளில் 90% கழிவுநீர் ஆறுகளிலும், ஏரிகளிலம், கடலிலும் கலக்கிறது.
★ 80% கழிவுநீரை நாம் சுத்திகரிப்பதில்லை.
★ ஒரு மணி நேரத்தில் 388 நபர்கள் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோயால் இறக்கின்றனர்.
★ மூன்றில் ஒரு பள்ளியில் சுகாதாரமான குடிநீர் இருப்பதில்லை.
யார் தண்ணீர் கொண்டு வருகிறார்கள்?
மூன்றில் இரண்டு பங்கு வீடுகளில் பெண்கள்தான் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
ஆப்ரிக்கா, ஆசியாவில், பெண்களும் குழந்தைகளும் ஒரு நாளைக்கு 6
கிலோமீட்டர் வரை நடந்து சென்று தண்ணீர் சேகரிக்கின்றனர்.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் 10 கோடி 40 லட்சம். அவர்களில் பெண்
குழந்தைகள் 6 கோடி 50 லடசம் பேர். சுத்தமான குடிநீர் வீட்டுக்கு அருகில்
கிடைத்தால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகரிக்கும் என்று ஐ.நா
சொல்கிறது.
ஒரு பொருள் நம் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்றால் மூலப்பொருள்
உற்பத்திக்கும், தொழிற்சாலையில் பொருளாக மாறுவதற்குள், தண்ணீர் வேண்டும்
அல்லவா?
அப்படியென்றால்...
★ 1 கிலோ சாக்லெட் உற்பத்திக்கு 20,000 லிட்டர் தண்ணீர்.
★ 1 கப் காபி 145 லிட்டர் தண்ணீர்
★ 1 டி ஷர்ட் 2700 லிட்டர் தண்ணீர்
★ 1 ஜீன்ஸ் 8000 லிட்டர் தண்ணீர்
★ 1 லெதர் பை 17000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
தகவல் ஆதாரம்: ஐ.நா உறுப்பு அமைப்புகளின் இணையதளங்கள