Search This Blog

எதிரொலி

எதிரொலி:

ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டு, ஆ... என்று கத்தியிருக்கிறீர்களா? என்ன நடக்கும்?

நீங்கள் ஒரு முறை எழுப்பிய சத்தம், எதிலோ மோதி, திரும்ப வந்து, மறுபடி
மறுபடி உங்களுக்குக் கேட்டிருக்கும். அதுதான் எதிரொலி (Echo).

எதிரொலி உருவாக, சரியான தூரத்தில் தடை ஏதாவது இருக்க வேண்டும்.
மனித மூளையில், ஒருமுறை கேட்ட ஒலி, ஒரு விநாடியில் பத்தில் ஒருபங்கு
நேரம் வரை (1/10 second) நிலைத்து இருக்கும். அதனால், அந்த நேர
இடைவெளிக்குள் கேட்கும் அடுத்த ஒலியை மூளையால் உணர முடியாது. எனவே, அதிக
தூரத்தில் தடை இருக்க வேண்டும்.

மனிதர்களால் கேட்கக்கூடிய ஒலியின் அதிர்வெண் 20Hz (Hertz - ஹெர்ட்ஸ்)
முதல் 20 KHz. இதற்குக் குறைவான அதிர்வெண் கொண்டஒலி 'தாழ் ஒலி'
(Infrasonic -இன்ஃப்ராசானிக்) எனப்படும். அதிக அதிர்வெண் கொண்ட ஒலி
'மீயொலி' (Ultrasonic - அல்ட்ராசானிக்) எனப்படும். இந்த இரண்டையும்
மனிதர்கள் கேட்க முடியாது. ஆனால் வெளவால், டால்பின் போன்ற விலங்குகளால்
கேட்க முடியும்.

ஒலியை அளக்கப் பயன்படும் அலகு 'டெசிபல்' (Decibel).
கடலின் ஆழத்தை அறிய எதிரொலிமானி (எக்கோ சவுண்டர் - Echo sounder) பயன்படுகிறது.

உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்களைக் கண்டறிய 'அல்ட்ரா சவுண்ட்'
(Ultra Sound) பயன்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url