தினமும் இரவில் ஒரே நேரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா?

தூக்கம் ஒருவருக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அத்தகைய தூக்கத்தை இரவில்
முழுமையாக பெறுவது தான் மிகவும் சிறந்தது. உடலும், ஆன்மாவுடன்
ஒன்றோடொன்று தொடர்புடையது. அவற்றில் ஏதேனும் ஒன்றில் சிறு
பிரச்சனையென்றாலும், உடல் அதனை ஒருசில அறிகுறிகளின் மூலம்
வெளிப்படுத்தும்.
அதனை நாம் சரியாக கவனித்து புரிந்து கொண்டால் நல்லது. சிலருக்கு தினமும்
இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பு ஏற்பட்டால், நாம் செய்த சில
தவறுகள் தான் காரணங்களாக இருக்கும். ஏனெனில் வெவ்வேறு கால அளவுகளுடன்
உடல் உறுப்புக்கள் தொடர்பு கொண்டுள்ளது.அந்த உறுப்புக்களில் ஏற்படும்
அசாதாரண செயல்பாடுகளால் தான் திடீரென்று விழிப்பு ஏற்படுகிறது. இங்கு
அதுக் குறித்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
9 pm – 11 pmஇந்த நேரம் தான் பெரும்பாலானோர் தூங்கும் நேரம். இந்த
நேரத்தில் ஹார்மோன்கள் மற்றும் மெட்டபாலிசத்தை பராமரிக்கும் நாளமில்லா
சுரப்பிகள், தன்னைத் தானே மறு சமநிலைச் செய்து, நொதிகளை புத்துயிர் பெறக்
செய்யும். ஆனால் இந்நேரத்தில் உங்களால் தூங்க முடியவில்லை என்றால்,
உங்கள் மூளை இன்னும் சிந்தனை நிலையில் உள்ளது என்று அர்த்தம். எனவே
தூங்கும் முன் சிறிது நேரம் தியானத்தில் இருந்து, உடல், மனம், ஆன்மாவை
அமைதிப்படுத்தி, பின் உறங்கச் செல்லுங்கள்.
11 pm – 1 amஇந்த கால நேரத்தில் சிறுநீர்ப்பை உடலில் உள்ள கொழுப்புக்களை
உடைத்தெரியும். ஆனால் இந்நேரத்தில் நீங்கள் தூங்க முடியாமல்
அவஸ்தைப்பட்டு வந்தால், அதற்கு மன அழுத்தம் மற்றும் அளவுக்கு அதிகமான
கெட்ட கொழுப்புக்கள் நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டதுகாரணமாக
இருக்கும்.
1 am – 3 amஇந்த நேரம் உடல் கடிகாரத்தின் மென்மையான செயல்பாட்டில்
முக்கியபங்கை வகிக்கிறது. ஏனெனில் இந்நேரத்தில் தான் கல்லீரலானது
கடுமையாக வேலை செய்து டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, புதிய
இரத்தத்தை உற்பத்தி செய்யும். ஆனால் இந்த நேரத்தில் விழிப்பு
ஏற்படுமாயின், நீங்கள் இரவில் மதுவை அதிகமாக அல்லது தாமதமாக
குடித்திருப்பது தான் காரணம்.
3 am – 5 amஇந்த கால நேரத்தில் தான் நுரையீரல் தன்னைத் தானே
புதுப்பித்துக் கொள்ளும். ஆகவே இந்நேரத்தில் நுரையீரலுக்கு அதிகப்படியான
ஆக்ஸிஜன் தேவைப்படும். ஆனால் இந்த கால நேரத்தில் விழிப்பு ஏற்பட்டால்,
உங்களுக்கு இருக்கும் மூச்சு பிரச்சனைகள் தான் காரணம். உங்களுக்கு இப்படி
விழிப்பு ஏற்பட்டால், மூச்சு பயிற்சி செய்து அமைதிப்படுத்தி மீண்டும்
தூங்குங்கள்.
5 am – 7 amஉடலை புதுப்பிக்கும் கடைசி கால நேரம் இது தான். இந்த
காலத்தில் பெருங்குடலின் பணி ஆரம்பமாகும். எப்படியெனில் டாக்ஸின்கள்
உடலில்இருந்து பெருங்குடல் வழியே வெளியேற்றப்படும். இந்நேரத்தில்
உங்களுக்கு தானாக விழிப்பு ஏற்பட்டு, நீங்கள் புத்துணர்ச்சியின்றி,
மிகுந்த சோர்வை உணர்ந்தால், இரவில் நீங்கள் மோசமான உணவை தாமதமாக
உட்கொண்டனது தான் காரணமாக இருக்கும்.
http://lankapuri.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d/