Search This Blog

ஜன கண மன பிறந்த கதை இது !

ஜன கண மன பிறந்த கதை இது !

முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட டிசம்பர் இருபத்தி
ஏழு. தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம். ஐந்து பத்திகள்
கொண்ட இதில் ஒரு பத்தியை மட்டுமே நாம் பாடுகிறோம் .உண்மையில் இதை எழுதிய
காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது. அந்த வலியோடு இந்த தேசம்
ஒன்று என வலியுறுத்த தாகூர் இப்பாடலை இயற்றினார். ஆங்கிலேயர் ஆட்சிகாலம்
வரை 'god save the queen' என்கிற பாடலைத்தான் பாடிக்கொண்டு இருந்தார்கள்.
தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில்
நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு
ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்து இயற்றப்பட்ட பாடல் இது
என்கிற கருத்து சில பேரால் சொல்லப்பட்டது உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ்
மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப்
பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி
அறிந்துகொள்ளாத 'ஸ்டேட்ஸ்மேன்', 'இங்கிலிஷ்மேன்' போன்ற ஆங்கிலப்
பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாக தவறாக தகவல்
வெளியிட்டன.
அந்த கூட்டத்தில் தாகூரே கம்பீரமாக அதைப்பாடினார். (
தாகூர் சிறந்த கவிஞர் மட்டும் அல்ல நல்ல இசை வல்லுனரும் கூட. அவரின்
பாடல்கள் இன்று வரை ரவீந்திர சங்கீதத்தில் இசைக்க பட்டு வருகின்றன ).
அந்த பாடல் வங்காளி மொழியில் எழுதப்பட்டாலும் சாது பாஷா எனும் சமஸ்க்ருத
வார்த்தைகள் அதிகம் பயின்று வருகிற நடையில் அப்பாடல் எழுதப்பட்டது. இந்த
பாடலை பாடியவாறே விடுதலை போராட்ட வீரர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள்.
அதனால் ,இந்த பாடலை பாடுவதற்கு ஆங்கிலேய அரசாங்கம் தடை விதித்தது.
இந்த பாடலை 1919 இல் ஜேம்ஸ் கசின்ஸ் எனும் ஐரிஷ்
கவிஞர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மடனபள்ளி பெசன்ட்
தியோசபிக்கல் கல்லூரியில் பாடினார்.அதை தொடர்ந்து அங்கே இருந்தவர்கள்
பிரார்த்தனை பாடலாக பட ஆரம்பித்து விட,தாகூர் அந்த பாடலை தானே
ஆங்கிலத்தில் "The Morning song of india "என்கிற பெயரில் மொழிபெயர்த்து,
ஜேம்ஸ் கசின்சின் மனைவுடன் இணைந்து இசையும் அமைத்தார் .
தாகூரின் ஜன கன மண எனும் இப்பாடல் 1943 இல் நேதாஜி
அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய படையின் தேசிய பாடலானது. ஜனவரி 24
அன்று 1950 ஆம் வருடம் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக
நம் தேசபக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.
என் பொன் வங்கமே என்கிற பொருளில் தாகூர்
வங்கப்பிரிவினையின் பொழுது எழுதிய அமர் சோனா பங்களா 1971 இல்
வங்காளதேசத்தின் தேசிய கீதமானது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url