தமிழ் எண்களின்
தமிழ் எண்களின் பெயர் விளக்கம்:
தமிழ் எண்களுக்கு பெயரிட்டது எப்படி என்பதற்கு சில விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.
முனைவர். கா.மீனாட்சிசுந்தரம் விளக்கம்:
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவரவர் கைச்சான் அளவில் எட்டுச் சான் இருப்பர்.
“ எறும்புக்கும் தன் கையால் தன்னுடல் எண் சான்”
என்பது
பழமொழி .
“அடி முதல் முழங்கால் வரை இரண்டு சான்கள், அதாவது எட்டுச் சான் உடலில் எட்டில் இரண்டு பங்கு.
எட்டில் இரண்டு பின்னத்தைச் சுருக்கினால் நான்கில் ஒன்றாகிறது.
உடனே “கால்” எனப் பெயர் வந்தது.
அடி முதல் இடுப்பு வரை நான்கு சான்கள். எட்டில் நான்கு அரையாயிற்று. எனவே இடுப்பை “அரை” என்று பெயர் வந்தது.
” என்று கால் மற்றும் அரை எண்களுக்கு விளக்கம்
அளிக்கப்பட்டது.