Search This Blog

வடமொழியில் பத்தின் அடுக்குகள்

வடமொழியில் பத்தின் அடுக்குகள்


கணிதத்தில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், முதலியவை பத்து என்ற எண்ணின் முதல் நான்கு அடுக்குகளாகும். கிரேக்ககாலத்திய கணிதமுறையில் வடிவவியலிலும் இன்னும் சில கணிதப் பிரிவிலும் கணிசமான கண்டுபிடிப்புகள் இருந்தாலும், எண்களைக் குறிப்பதிலும், எண்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதிலும் ஒரு எளிதான குறிமானம் இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, குறிப்பாக மகாபாரதம், இராமாயணம் முதலிய இதிகாசங்கள் தோன்றுமுன்பே, இந்திய ஆவணங்களில் எண் பத்தின் பதினேழு அடுக்குகளுக்குத் தனிப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. வடமொழியில் பத்தின் அடுக்குகளுக்குள்ள இப்பெயர்களைப் பட்டியலிடுகிறது, லீலாவதி என்ற கணிதநூல்.

அடுக்குகளின் பட்டியல்

பெயர் பத்தின் அடுக்கு
ஏக 100
தச 101
சத 102
ஸஹஸ்ர 103
அயுத 104
லக்ஷ 105
ப்ரயுத 106
கோடி 107
அர்புத (arbuda) 108
அப்ஜ 109
கர்வ (kharva) 1010
நிகர்வ 1011
மஹாபத்ம 1012
ஶங்க்க 1013
ஜலதி 1014
அந்த்ய 1015
மத்ய 1016
பரார்த 1017
இதன் சிறப்பு என்னவென்றால் இப்பெயர்கள் சரளமாக வடமொழிக் கணித நூல்களில் மட்டுமல்லாமல், கோவில் ஆவணங்களிலும், பத்திரங்களிலும், சரித்திர, கலை நூல்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக மகாபாரதப்போரில் உள்ள எண்ணிக்கைகளெல்லாம் இப்பெயர்களைக் கொண்டுதான் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url