Search This Blog

ஓமைக்ரான் (omicron) என்றால் என்ன ?

ஓமைக்ரான் (omicron) என்றால் என்ன ? 


தென் ஆப்பிரிக்காவில் அண்மையில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் ( வைரஸ் திரிபு ) தான் ஓமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது . B.1.1.529 என்று குறிக்கப்படும் இந்த கொரோனா வைரஸை கவலைக்குரிய திரிபு ' என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு ( WHO ) , அதற்கு ஓமைக்ரான் என்று பெயர் சூட்டியுள்ளது .

' கவலைக்குரிய திரிபு ' என்று ஓமைக்ரான் ஏன் குறிப்பிடப்படுகிறது ? B.1.1.529 என்று தொழில்நுட்ப ரீதியாக அறியப்படும் ஓமைக்ரான் , அதிக எண்ணிக்கையில் கட்டமைப்பு மாற்றங்களை அடைந்துள்ளது தான் , இதன் மீதான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . அதாவது , இது மிக எளிதாக பரவக்கூடியது என்பதால் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது . 

ஓமைக்ரான் எத்தனை திடீர்மாற்றங்களை அடைந்துள்ளது ? ஓமைக்ரான் மொத்தத்தில் , அதன் கட்டமைப்பில் 50 மாற்றங்களை அடைந்துள்ளதாகவும் , அதன் முள் புரத ( spike protein ) கட்டமைப்பில் மட்டும் 30 திடீர்மாற்றங்களை அடைந்துள்ளது . இதனால் தடுப்பூசி பாதுகாப்பையும் மீறி , அது வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம் . " முள் புரதம் : மனித செல்லுக்குள் நுழைய ஏதுவாக செல்லுடன் இணையும் வைரஸ் உடலை சுற்றியுள்ள முள் வடிவ புரதம் .

ஓமைக்ரான் பாதிப்பு இதுவரை எத்தனை நாடுகளில் பதிவாகியுள்ளது ? தென் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , இத்தாலி , ஜெர்மனி , நெதர்லாந்து , பிரிட்டன் , இஸ்ரேல் , ஹாங்காங் , போட்ஸ்வானா , பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புதிய ஓமைக்ரான் கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது .
 
? ஓமைக்ரான் உருவானது எப்படி ? ஓமைக்ரான் திரிபு எப்படி ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை . ஆனால் , குறுகிய காலத்தில் இத்தனை திடீர் மாற்றங்களுடன் உருவெடுத்துள்ளதால் , இது வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது . தென் ஆப்பிரிக்காவில் புதிதாக தொற்று ஏற்படுபவர்களில் பெரும்பாலானோரிடம் ஓமைக்ரான் காணப்படுவதாக சொல்லப்படுகிறது .

 ஓமைக்ரான் பாதிப்பை எப்படி எதிர்கொள்ளலாம் ? ஓமைக்ரானின் வீரியம் குறித்து முடிவு எடுக்கும் அளவுக்கு அதைப் பற்றி ஆய்வுகள் ஏதும் முடிவடையவில்லை . அதனால் , பீதி அடைய தேவையில்லை என்று சொல்லும் மருத்துவ நிபுணர்கள் , கூடுதல் எச்சரிக்கையை மட்டும் கடைப்பிடிக்க சொல்கின்றனர் . ஓமைக்ரானை தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்கும் என்பது பற்றியும் தகவல் இல்லை . " ஓமைக்ரான் அதன் அமைப்பில் அதிக மாறுபாடுகளை கொண்டிருப்பதால் தான் கவலை ஏற்படுத்துவதாக உள்ளது "

சிகிச்சையை விட வருமுன் தடுப்பது சிறந்தது கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை , கொரோனாவும் ஒழிந்துவிட வில்லை . ஆகவே , அதைத் தடுக்க தேவையான அத்தனை தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை எடுப்பது நம் அனைவரின் கடமையாகும் . " ஓமைக்ரான் - இந்த புதிய வகை கொரோனா திரிபு பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருக்க . வேண்டும் . இந்த பயனுள்ள தகவலை உங்கள் குடும்பத்தினர் & நண்பர்களுக்கு பகிருங்கள் " " இதில் நாம் எல்லாரும் ஒன்றாக இருக்கிறோம் . நீங்கள் பாதுகாப்பாக இருக்கையில் , நானும் பாதுகாப்பாக இருக்கிறேன்.


ஓமைக்ரான் கவலையை ஏற்படுத்தும் திரிபு


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url