விளக்கை ஊதினால் அணைகிறது.. அடுப்பை ஊதினால் ஏன் எரிகிறது தெரியுமா?
விளக்கை ஊதினால் அணைகிறது.. அடுப்பை ஊதினால் ஏன் எரிகிறது தெரியுமா?
விளக்கு, அடுப்பு என இரண்டும் எரிவதற்கு ஆக்ஸிஜன் வேண்டும். எரியும் விளக்கில் திரியின் மேல் வரும் எண்ணெயின் ஆவியே பற்றி எரிகிறது. ஊதும் பொழுது வாயினுள் இருந்து வரும் காற்று எண்ணெய் ஆவியை திரியில் இருந்து நீக்குவதால் விளக்கு அணைகிறது.
அடுப்பு எரியும் பொழுது அல்லது எரியாது தணலாக இருக்கும் வேளையில் தணலைச் சுற்றி காற்றில் உள்ள ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டிருக்கும். நாம் வாயினால் ஊதும் பொழுது ஆக்ஸிஜன் குறைந்த காற்று நீக்கப்பட்டு, ஆக்ஸிஜன் கூடிய காற்று அந்த இடத்துக்கு வரும்.
அணையும் நிலையில் உள்ள நெருப்பாயின் தணலில் சாம்பல் ஓடுவதால் நெருப்பில் ஆக்ஸிஜன் படுவது தடைபடும். ஊதும் பொழுது தணலின் மேல் உள்ள சாம்பல் நீக்கப்பட்டு ஆக்ஸிஜன் படுவதால் அது பற்றி எரிகிறது.