எல்பிஜி அல்லது ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏன் உருளை வடிவில் மட்டுமே உள்ளன?
எல்பிஜி அல்லது ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏன் உருளை வடிவில் மட்டுமே உள்ளன?
🎈 இன்றைய நவீனக் காலக்கட்டத்தில் அனைவரின் வீடுகளிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்த எல்பிஜி சிலிண்டர் உருளை வடிவில் மட்டுமே உள்ளது.
💠 நீங்கள் எப்போதாவது ஒரு சதுர எல்பிஜி சிலிண்டரை பார்த்திருக்கிறீர்களா? அல்லது, நீங்கள் எப்போதாவது சதுர வடிவிலான டேங்கர் தண்ணீர் அல்லது எண்ணெய் லாரியை பார்த்திருக்கிறீர்களா? சிலிண்டர்கள் உருளை வடிவில் மட்டும் இருப்பது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
🎈 இப்போது சிலிண்டர்கள் உருளை வடிவத்தில் மட்டுமே இருப்பதன் காரணத்தை தெரிந்து கொள்வோம். சிலிண்டர் வட்டமாக அல்லது உருளை வடிவில் உருவாக்குவதற்கு அழுத்தம் தான் முக்கிய காரணம்.
💠 ஒரு திரவம் அல்லது வாயு ஒரு கொள்கலன் அல்லது தொட்டியில் வைக்கப்படும் போது, அதன் மூலைகளில் அதிகபட்ச அழுத்தம் ஏற்படுகிறது.
🎈 எனவே சிலிண்டர்கள் சதுரமாக இருந்தால், அவை நான்கு மூலைகளையும் கொண்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நிறைய அழுத்தம் உள்ளே குவிந்துவிடும். இதன் காரணமாக, சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்படும்.. அல்லது சிலிண்டர் வெடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
💠 ஆனால் அதே நேரத்தில் ஒரு உருளை வடிவத்தில், சிலிண்டரின் அழுத்தம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த காரணத்திற்காகவே, சிலிண்டர்கள் உருளை வடிவத்தில் உருவாக்கப்படுகின்றன.
🎈 சிலிண்டரின் அளவு உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த சிலிண்டர்கள் அல்லது டேங்கர்களின் உதவியுடன் எரிவாயு அல்லது திரவத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
💠 உருளை வடிவ டேங்கர் வாகனத்தில் எரிவாயு ஏற்றப்படும் போது, அது ஈர்ப்பு மையத்தை குறைக்கிறது. இது வாகனத்தை நிலையாக வைத்திருப்பதோடு, எந்த விதமான விபத்தும் ஏற்படாது.
விமானத்தில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி விமான பணிப்பெண்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள்?
📱 விமானத்தில் தனிப்பட்ட எலெக்ட்ரானிக் டிவைஸ்களை (Electronic device) பயன்படுத்துவதற்கு தடை செய்யவில்லை. பிறகு ஏன் செல்போன்களை ஆஃப் செய்யும்படி வலியுறுத்துகின்றனர்? என்றால், செல்போன் உட்பட அனைத்து, எலெக்ட்ரானிக் டிவைஸ்களும், ரேடியோ (Radio) அலைகளை உமிழும். இந்த ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணும், நேவிகேஷன் (Navigation) கருவியின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருந்தால், காக்பிட்டில் (Cockpit) உள்ள ஏரோநாட்டிகல் (Aeronautical) உபகரணத்தில் இடையூறு ஏற்படலாம்.
🚁 இதுதவிர நீங்கள் மிகவும் அதிகமான உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது செல்போன்கள் வலுவான சிக்னல்களை அனுப்பும். இதன் காரணமாக தரையில் நெட்வொர்க் நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அத்தகைய சிக்னல் குறுக்கீடு காரணமாக தற்போது வரை ஒரு விமான விபத்து கூட நிகழ்ந்தது கிடையாது.
📱 இதற்கு ஒருவரின் டிவைஸ், ரேடியோ அலைகளின் மூலமாக கனெக்ட் செய்யப்பட வேண்டும். எனவே செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் (Switch Off) செய்ய வேண்டும் என்ற விதிமுறை முன்னெச்சரிக்கை காரணமாக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம் டேக்-ஆஃப் (Take-off) மற்றும் லேண்டிங் (Landing) செய்யப்படும்போது, எலெக்ட்ரானிக் டிவைஸ்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.