Search This Blog

இலுப்பை மரம் பற்றி அறிவோம்


மரத்தின் பெயர் : இலுப்பை மரம்

தாவரவியல் பெயர் : பாசியா லோங்கிஃபோலியா

ஆங்கில பெயர் : Mahua Tree, Iluppai Tree

தாயகம் : இந்தியா

மண் வகை : வண்டல் மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : சப்போட்டேசியே

பொதுப்பண்புகள் : 

🌳 இலுப்பை விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.

🌳 இலுப்பை மரம் வெப்ப மண்டல மரவகையைச் சேர்ந்தது. கோடைகாலத்தில் இலையை உதிர்த்து விடும்.

🌳 சப்போட்டா தாவர குடும்பத்தை சேர்ந்தது. இலைகள் சப்போட்டா இலையை ஒத்திருக்கும்.

🌳 நூறு அடிக்குமேல் வளரக்கூடியது. சப்போட்டா குற்று செடி அல்லது குற்று மர வகையைச் சேர்ந்த்து, ஆனால் இலுப்ப மிக உயரமாக வளரும்.

🌳 பூக்கள் உருண்டை வடிவமும் இனிப்பு சுவையும் வெண்மை நிறமும் உடையதாய் இருக்கும்.

🌳 இலுப்பை பூ முத்தின் வடிவில் சாறுடையதாக இருக்கும். இலுப்பை பழத்தின் சுவை, மணம் அனைத்தும் சப்போட்டா பழத்தை ஒத்திருக்கும்.

🌳 ஆனால் அதன் கொட்டை சப்போட்டா விதையை விட பெரிதாக இருக்கும்.

🌳 குளக்கரையிலும் தரிசு நிலங்களிலும் இலுப்பையை நட்டு வளர்க்க முடியும்.
பயன்கள் : 

🌳 இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இரத்தச்சோகை மாறும்.

🌳 இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும். அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும்.

🌳 இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும்.

🌳 இலுப்பை கொட்டையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். சப்போட்டா விதைகள் முளைக்கும் தன்மை அற்றது.

🌳 அதனால் இலுப்பை விதையை முளைக்க வைத்து அதனுடன் சப்போட்டா மரக்கிளையை ஒட்டு சேர்க்கின்றனர். மரத்தின் உள்பாகம் மிகவும் உறுதி உடையது.

🌳 இதன் எண்ணெய் சற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலேசான கசப்பு சுவையைப் பெற்றிருக்கும்.

🌳 இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் சிறிது கசப்பு சுவையாக இருக்கும்.

🌳 கோயில்களில் விளக்கு வைக்க இந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். அதனால் சிவன் கோயில் உள்ள இடங்களில் இலுப்பை மரங்களை நட்டு வளர்த்தனர். இதன் எண்ணெய் மருந்தாகவும் பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் : 

🌳 மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது.

🌳 பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது.

🌳 தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை.

🌳 மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


நோய் தடுக்கும் முறைகள் : 

🌳 இந்த மரத்தில் நோய் தாக்குதல் குறைவு.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url