நவம்பர் 9 - தேசிய சட்ட சேவைகள் தினம் (National Legal Service Day)
சட்ட சேவைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி மாநில அதிகாரிகள் மூலம் கொண்டாடப்படுகிறது.
தேசிய சட்ட சேவைகள் தினம் என்பது சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்ததை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 ந் தேதி கொண்டாடப்படுகிறது.
சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம்[2] 1987 அக்டோபர் 11 ந் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவம்பர் 9 ந் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் 1995 டிசம்பர் 5 ந் தேதியன்று தொடங்கப்பட்டது.