முதன் முதலில்
முதன் முதலில்
♦ தமிழில் முதன் முதலில் வந்த உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.
♦ கிரெடிட் அட்டையை முதன் முதலில் வழங்கிய இந்திய வங்கி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
♦ உலகை முதன் முதலில் வலம் வந்த கப்பலின் பெயர் விக்டோரியா.
♦ சூரிய உதயத்தை முதன் முதலில் பார்ப்பவர்கள் ரஷ்யர்கள்.
♦ விவசாயம் முதன் முதலில் தாய்லாந்தில் தொடங்கப்பட்டது.
♦ முதன் முதலில் இரும்பு கப்பலைச் செய்தவர் வில்கின்சன்.
♦ பெண்களுக்கு முதன் முதலில் ஓட்டுரிமை அளித்த நாடு நியுசிலாந்து.
♦ வண்ணத் தொலைக்காட்சியை முதன் முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு பிரான்சு.
♦ உலகம் உருண்டை வடிவம் என்று முதன் முதலில் நிரூபித்த தத்துவஞானி அரிஸ்டாட்டில்.
♦ மோட்டார் ரோடுரோலர் முதன் முதலில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது.
♦ கருணை கொலையை முதன் முதலில் சட்டபூர்வமாக அனுமதித்த நாடு நெதர்லாந்து.
♦ முதன் முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
♦ உலகில் முதன் முதலில் வீட்டு விலங்காக கருதப்பட்ட விலங்கு நாய்.
♦ கராத்தே பள்ளி முதன் முதலில் தோன்றிய நாடு ஜப்பான்.
♦ இந்தியா முதன் முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).