Search This Blog

தமிழின் பெருமைகள் நான்கு வரி செய்யுளில் பிதாகரஸ் கணித கோட்பாடு !!!!

நான்கு வரி செய்யுளில் பிதாகரஸ் கணித கோட்பாடு !!!!
தமிழின் பெருமைகள்
நான்கு வரி செய்யுளில் பிதாகரஸ் கணித கோட்பாடு !!!!

பைதகரஸ் காகிதத்தில் கிறுக்கியதை பல்லாயிரம் ஆண்டுக்கு முன்
……………………..……………………..
……………………..………….
இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பைதகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பைதகரஸ்என்பவர் கண்டaறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
==========================
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.
போதையனார்
============================
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் கோட்பாட்டின்ன் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.

செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் a மற்றும் b எனில், அதன் கர்ணம் c -ஐ கண்டறிய உதவும் கீழ்க்கண்ட சமன்பாடு பித்தாகரஸ் என்னும் கணித மேதை நிறுவியது.

a 2 + b2 = c 2
நான் படிக்கிற காலத்தில் இதை அப்படியே உருப்போடச் சொல்லி விட்டார்கள். ஆனால் அகிலுக்கு அப்படி இல்லை. அவனால் கீழே உள்ள படம் போல வரைந்து உடனே அதை நிறுவிக்காட்ட முடிந்தது.

தொடர்ந்து பாஸ்கரன் செங்கோண முக்கோணத்தின் கர்ணம் என்னும் hypotenuse-ஐ கண்டறிய பல வழிகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று நம் பழந்தமிழர் கண்டு பிடித்தது என்றும் சொன்னார். சில ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்தத் தமிழ்ப்பாடலில் அந்த வழி முறை சொல்லப்பட்டுள்ளது.

ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூறிலே ஒன்று தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே.

( a – (a/8) ) + (b/2) = c
என்பதே அந்தப் பாடல் சொல்லும் சமன்பாடு. நீளமான பக்கத்தை எட்டாய்ப் பிரித்து, அதில் ஏழு கூறுகள் நீளத்தை எடுத்துக் கொண்டு, அதனுடன் உயரத்தில் பாதியைக் கூட்டினால் கிடைப்பது கர்ணத்தின் நீளம். 4-ஐ எட்டாகப் பிரித்தால் 0.5. அதைக் கழிக்க 4 – 0.5 = 3.5. அதனுடன் உயரத்தில் பாதியை (3/2 = 1.5) கூட்டினால் 3.5 + 1.5 = 5 கிடைப்பது கர்ணம்!

தமிழன் ஒரு வேளை கற்றலையும்/கல்வியையும்
பொதுவுடமையாகவும்,உலகறியச் செய்து இருந்தால் ….
அவர்கள் தரணி எங்கும் அறிய ப்பட்டு இருப்பார்கள் –

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url