டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம் (World Human Rights Day):
ஐ.நா. பொதுச்சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அனைத்துலக மனித உரிமைகள் என்கிற பிரகடனத்தை வெளியிட்டது. சாதி, மதம், இனம், பால், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடுகாட்டி வேறுபடுத்தக் கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.