டிசம்பர் – 10 நோபல் பரிசு விழா (Nobel Prize Ceremony)
உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895இல் ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 இல் நோபல் பரிசு விழா நடக்கிறது.