மார்ச் 17 : உலக தூக்க தினம்:
உலக தூக்க தினம்:
ஒவ்வொரு ஆண்டும் உலக தூக்க தினம் மார்ச் மாதத்தில் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை (மார்ச் 17) கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பல கோடி பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலையே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான தூக்கமே பல பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
தூக்கமே நல்ல மருந்தாக செயல்படுகிறது. தூக்கம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தூக்க மருந்து உலக சங்கம் 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.