*இனிமையான தூக்கம்!... எளிமையான டிப்ஸ்!..*
*இனிமையான தூக்கம்!... எளிமையான டிப்ஸ்!..*
மனித உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியமான ஒன்று. ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூங்குவதற்கு செலவிடுகிறோம். நவீன அறிவியலும் கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூங்குவதன் மூலம் உடலுக்கு உள்ளத்திற்கு தேவையான ஓய்வும், அமைதியும் கிடைக்கிறது.
தற்போது பெரும்பாலானோர் தூக்கத்தை தொலைத்து தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி தூக்கத்தை தொலைத்து தேடுவதற்கு முக்கிய காரணம், மன அழுத்தம் தான். இன்றைய அவசர காலக்கட்டத்தில் அதிகப்படியான வேலைப்பளுவினால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் இரவில் கூட நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லை.
*இனிமையான தூக்கம் :*
தூங்குவதனால் உடலில் ஏற்படும் சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். தூங்குவதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதே போல குறிப்பிட்ட நேரம் தூங்குவதும் அவசியம். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இருக்கிறது. கிழக்கு சிறந்தது, மேற்கு பரவாயில்லை. தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்பது மருத்துவர்கள் சொல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையு+று ஏற்படும் என்பதால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.
*தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான்.*
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழியாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்புக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும்.
கவிழ்ந்து படுக்கக் கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
*தூங்கும்முன் கவனிக்க வேண்டியவை :*
இரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள் டீ, காபி குடிக்க வேண்டாம்.
இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும்.
சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து, டென்ஷனாகி கொண்டிருப்பர், கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளோர், கடவுளை நினைத்துக் கொள்ளலாம். அன்றைய பொழுது இனிமையாக சென்றதற்கு கடவுளுக்கு நன்றி கூறலாம்.
படுக்கை அறையில் அதிகமான வெப்பமோ அல்லது அதிகமான குளிரோ இல்லாமல், மிதமான தட்பவெப்பம் இருப்பது நல்லது.
சிந்தனையைத் தூண்டாத, மகிழ்ச்சி தரும் புத்தகத்தை படிக்கலாம்.
மனசுக்கு இதமான இசையை கேட்பதும் நல்லது.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp